தளி அருகே யானை தாக்கி படு படுகாயம்.

X

தளி அருகே யானை தாக்கி படு படுகாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா(69) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது ஆச்சுபாலம் அருகே சென்றபோது அங்குள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த யானை இருசக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ணப்பாவை காட்டுயானை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் நிலை தடுமாறிய அவர் இருசக்கர வாகனத்தோடு சாலையிலிருந்து தவறி அங்குள்ள பள்ளத்தில் விழுந்து படு காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story