திருவாசல் ஸ்ரீ முனீஸ்வர சுவாமி கோயிலில் பழமையான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கு விழா

சிவலிங்கம், முனீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் - மகா தீபாராதனை
நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் திருவாய்மூர் ஊராட்சிக்குட்பட்ட திருவாசல் பகுதியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. சிவலிங்கத்தை அப்பகுதி பொது மக்கள் வணங்கி வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ முனீஸ்வர சுவாமி கோயிலில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்நபன ஹோமத்துடன் கூடிய குடமுழுக்கு விழா நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடத்தில் இருந்த புனித நீரை கொண்டு சிவலிங்கம் மற்றும் முனீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர். மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில், மணக்குடி கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி, ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story