இந்து முன்னணி கட்சி சார்பில் மாநாடு

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு இப்படி செய்வது இந்து அறநிலைத்துறைக்கு எந்த அருகதையும் இல்லை இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன் பேட்டி.
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு இப்படி செய்வது இந்து அறநிலைத்துறைக்கு எந்த அருகதையும் இல்லை இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன் பேட்டி ஜூன்- 22 ஆம் தேதி மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது இந்த நிகழ்வுக்கு திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் இருந்து வேல் திருக்கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், மாநிலச் செயலாளர் ரவீந்திரன், ஆகியோர்கள் சிறப்பாக அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்வில் மாநாட்டிற்கு எடுத்துச் செல்லும் வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருக்கோயில் மாடவீதியில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினார்கள் இந்த நிகழ்வின் ஏற்பாடுகளை, மாவட்ட செயலாளர்கள் ஜெ. செல்வா, என 100க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.. இந்நிகழ்வை தொடர்ந்து இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது:- 1) மதுரையில் முருக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முருகர் மாநாடு இந்த நிகழ்வுக்கு ஆறுபடை வீடுகளிலிருந்து வேல் பூஜை செய்யப்பட்டு எடுத்து செல்லப்படுகிறது இந்த நிலையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இருந்தும் வேல் பூஜை செய்யப்பட்டு மதுரையில் முருகர் மாநாட்டில் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை வழங்கப்படும். 2) இந்துக்கள் கோயில்களை படுமோசமாக விமர்சனம் செய்த விசிகே தலைவர் தொல் திருமாவளவன் இந்த முருகர் பக்தர்கள் மாநாடை இவர் நல்லதை சொன்னால் மட்டும்தான் சந்தேகப்பட வேண்டும் அவர் சொல்ல வேண்டிய கருத்துக்கள் எல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை, ஆனால் அவர் கூறுவது ஒரு விளம்பரம், இந்த திருமாவளவன், இந்த சேகர்பாபு, இவர்கள் கூறுவது விளம்பரம் சங்கி மாநாடு , இல்லை இது ஒட்டுமொத்த முருகர் பக்தர்களின் மாநாடு, இந்த மாநாட்டில் கின்னஸ் சாதனை செய்ய உள்ளோம் கந்த சஷ்டி கவசத்தை இந்த மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக பாட உள்ளோம் 3) சேகர்பாபு அடிக்கடி ஒரு வார்த்தையை கூறுவார் இது ஒரு ட்ரெய்லர் என்று கூறுவார் ஆனால் அதை நாங்கள் கூறுகிறோம் இந்த மாநாடு ஒரு ட்ரைலர் தான் மெயின் ரோல் இனிமேல் தான் வரப்போகிறது 4) நாம் தமிழர் கட்சி சீமான் இந்த மாநாட்டை விமர்சனம் செய்வதற்கு இந்த மாநாடு ஏன் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடாக நடைபெறுகிறது என்பது நாம் தமிழர் கட்சி சீமானுக்கு நன்றாக தெரியும் திருப்பரங்குன்றம் முருகர் மாலையை சிக்கந்தர் பாதுஷா மலை என்று சொன்னதன் விளைவு இஸ்லாமியர் மலை என்று சொன்னதின் விளைவுதான் இந்த முருகர் மாநாடு தேவைப்படுகிறது 5) பிள்ளையாரை சாலையில் தூக்கி எறிந்து உடைத்தார்கள் , பிள்ளையாருக்கு செருப்பு மாலை அணிவித்தார்கள் இதன் விளைவு வீதிக்கு வீதி பிள்ளையாரை வைத்து வணங்கும் நிலையை நாங்கள் ஏற்படுத்தி உள்ளோம் இன்று முருகருக்கு பிரச்சனை ஏற்படுத்தி உள்ளனர் அதனால் முருகரை கையில் எடுத்துள்ளோம் 6) தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பது வெட்கக்கேடான விஷயம் , என்னுடைய கோயில் எனது சாமி இந்து அறநிலைத்துறை உள்ளே விடுவதற்கு உள்ளே விடக்கூடாது என்பதற்கு என்ன அருகதை இருக்கிறது அவர்களுக்கு அதிகாரமும் இல்லை , திருக்கோயில்களில் கணக்கு பார்க்க வந்தவர்கள் தான் அறநிலை துறை, நாட்டாமை செய்ய வரவில்லை, தமிழகத்தில் உள்ள கோயில்களை கட்டியது அறநிலைத்துறையா? அல்லது அரசியல்வாதியா சொல்லுங்க? இந்த கோயிலை கட்டியவர்கள் நமது முன்னோர்கள் கோயில் கட்டுவதற்கு இடம் கொடுத்தவர்கள் நமது முன்னோர்கள், என்று பேசினார்.....
Next Story