காற்று வீசியதில் பேனர் விழுந்து ஒருவர் படுகாயம்

மழையுடன் பலத்த காற்று வீசியதில் வானகரத்தில் ராட்சத பேனர் விழுந்ததில் ஒருவர் படுகாயம்
சென்னை மழையுடன் பலத்த காற்று வீசியதில் வானகரத்தில் ராட்சத பேனர் விழுந்ததில் ஒருவர் படுகாயம் தலை பகுதியில் 15 தையல் சென்னை மதுரவாயல் அடுத்த பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் சிக்னல் அருகே இன்று பிற்பகல் பலத்த காற்றுடன் மழை பெய்த போது மாடியில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் அடியோடு சாய்ந்தது பேனர் கம்பி நிற்பதற்காக போடப்பட்டிருந்த கான்கிரீட் கலவைகள் பெயர்ந்து பின்னால் இருந்த வீட்டின் மீது விழுந்ததில் வீட்டில் உள்ளே இருந்த மேற்கூரை பூச்சி பெயர்ந்து சேதமடைந்து கீழே விழுந்ததில் வீட்டில் இருந்த நபரின் தலையில் விழுந்து பலத்த காயம்ஏற்ப்பட்டது .15 தையல் போடப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை இதில் வானகரம் ,சிவபூதமேடு பஜனை கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் Age 45 என்பவர் தலையில் விழுந்ததில் விழுந்ததில் நடு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு உறவினர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .15 தையல்கள் போடப்பட்டுள்ளது ..சம்பவம் குறித்து வானகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பேனர்கள் வைக்க கூடாது என உத்தரவு உள்ள நிலையில் உரிய அனுமதியின்றி சில தனியார் நிறுவனங்கள் விளம்பரத்துக்காக இது போன்ற ராட்சத பேனர்கள் வைப்பதாலே மழைக்காலங்களில் கீழே சாய்ந்து விபத்து ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு காயங்களும் ஏற்படுகிறது எனவும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களை அரசு அதிகாரிகள் கவனத்தில் எடுத்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கோரிக்கை வைக்கின்றனர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆங்காங்கே விளம்பரத்திற்காக ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக அனுமதியின்றையே இந்த ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது...
Next Story