ஜெயங்கொண்டம் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கலவை இயந்திர ஓட்டுநர் பலி.*

ஜெயங்கொண்டம் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கலவை இயந்திர ஓட்டுநர் பலி.*
X
ஜெயங்கொண்டம் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கலவை இயந்திர ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரியலூர், ஜூன்.10- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகணேஷ் (32) இவர் கலவை எந்திர ஓட்டுநராக உள்ளார். இவர் சிலால் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் இருக்கும் மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன் இஷாந்தை பார்த்துவிட்டு அருகில் உள்ள அணைக்குடம் கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயங்கொண்டம் டு தா.பழூர் ரோட்டில் தனியார் பெட்ரோல் பங்க் எதிரே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிவகனேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக சாலை ஓரம் அவர் இறந்து கிடந்ததை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் காலையில் அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவகணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
Next Story