வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம்

X

வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரபாக்கம் தனியா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மே 5 -தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் டைமன் ராஜா வெள்ளையன் கலந்து கொண்டு மாநாட்டில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story