கோவை: குடிநீர் குழாய்கள் சேதம்: பொதுமக்கள் ஆத்திரம் !

கோவை: குடிநீர் குழாய்கள் சேதம்: பொதுமக்கள் ஆத்திரம் !
X
பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட புள்ளிகளால் குடிநீர் குழாய் உடைந்து சேதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டம்.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியில் இருந்து குடிமங்கலம் வரை தனியார் தொழிற்சாலைகளுக்காக தண்ணீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சுல்தான்பேட்டை பகுதிகளில் பொக்லைன் மூலம் தோண்டபட்ட குழிகள் காரணமாக, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் குழாய்கள் பல இடங்களில் உடைந்து, தண்ணீர் வீணானது. இதனால் குடிநீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டு, மக்கள் அதிருப்தியில் குழாய் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், சாலை மறியலுக்கும் முயற்சி செய்தனர். தகவல் அறிந்து வந்த சூலூர் தாசில்தார் சரண்யா, சேதமின்றி பணியை தொடர வேண்டும் என்றும், பழுதான குழாய்களை உடனடியாக சீர்செய்ய வேண்டும் என்றும் இன்று எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர் பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டனர்.
Next Story