கோவை: பணம் பறித்த ரவுடி கைது !

X

நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது.
கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த நாகேந்திரன் (39) தனியார் நிறுவன ஊழியர். இவர் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், நாகேந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி சட்டைப்பையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து நாகேந்திரன் நேற்று ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பணம் பறித்தவர் ரத்தினபுரியைச் சேர்ந்த இம்மானுவேல் மோசஸ் (வயது 25) எனவும், இவர் பிரபல ரவுடியாக இருப்பதுடன், பல்வேறு வழக்குகளும் இவர்மீது உள்ளதாகவும் தெரிய வந்தது. மேலும், கோவை மாநகர காவல் துறையின் கண்காணிப்பிலும் இவர் இருந்ததாகவும், இதனைத் தொடர்ந்து போலீசார் இம்மானுவேல் மோசசை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story