ஸ்ரீ ஷேத்ரா அனுஷயா தத்ததாம் ஆலய வருஷாபிஷேக விழா

X

வட்டக் கோட்டை
கன்னியாகுமரி மாவட்டம் வட்டகோட்டை யில் அமைந்துள்ள ஸ்ரீ ஷேத்ரா அனுஷயா தத்ததாம் ஆலய வருஷா பிஷேக விழா நடந்தது விழாவுக்கு ஆலய தலைவர் ஸ்ரீ டெம்பே சுவாமிஜி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி தலைமை குரு குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார், பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர். வருஷாபிஷேக விழாவை யொட்டி ஆலயத்தில் ருத்ர அபிஷேகம் தீபாராதனை மஹா தத்தாத்ரேயா யாகமும் நடந்தது. பகல் சுவாமி ஸ்ரீ டெம்பே சுவாமிஜி தலைமையில் பக்தர்கள் கன்னியாகுமரி சென்று பாரத மாதாவுக்கு பூஜை செய்தனர். பின்னர் ஊர்வலமாக விவேகானந்த கேந்திரம் சென்று விநாயகர் கோயிலுக்கு பூஜை செய்தனர். வட்டகோட்டையில் சமுத்திர பூஜையும் வருஷாபிஷேக விழா அருளுரை நடந்தது. பக்தர்களுக்கு மகா பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் அருண்பாட்டில் அருள் சடோ தீபக்சாலமன் விஜய் பட்டேல் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Next Story