சோழவந்தானில் ஆயிரக்கணக்கானோர் எடுத்து வந்த பால்குடம் ஊர்வலம்

மதுரை சோழவந்தானில் நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவிலில் கடந்த 2ம்தேதி வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம், அக்னிச்சட்டி எடுக்கும் திருவிழா இன்று (ஜூன் .10) நடைபெற்றது. .இதில் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பூஜை செய்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து அங்கிருந்து கோவில் முன்பு உள்ள மூன்றுமாத கொடிக்கம்பத்தைச் சுற்றி நான்கு ரத வீதி வலம் வந்து நேர்த்திகடனை செலுத்தினார்கள். இந்த விழா நேற்று இரவு முதல் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து வந்தனர். நேர்த்திக் கடனுக்காக உருவபொம்மை , ஆயிரங்கண் பானை, 21அக்னிச்சட்டி,கரும்பு தொட்டில் குழந்தை எடுத்து வருதல், கரும்புள்ளி,செம்புள்ளிகுத்தி வருதல், அழகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அண்டை மாநிலங்களில் இருந்தும் மற்றும் பலமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கான பேர்வருகை புரிந்து திருவிழாவை கண்டுகளித்து அம்மனை தரிசித்தனர்.
Next Story