மேலூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

மேலூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி
X
மதுரை மேலூர் அருகே நடந்து சென்றவர் மீது வேன் மோதியதில் ஒருவர் பலி.
மதுரை மாவட்டம் மேலூர் கச்சிராயன்பட்டியைச் சேர்ந்த சேவுகன் மகன் பாண்டி (50) என்பவர் நேற்று முன்தினம் (ஜூன்.8) காலை திருச்சி மதுரை நான்கு வழி சாலையில் புரண்டிபட்டி வெங்கடேஷ் டீக்கடை அருகில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திருச்சி குளித்தலையைச் சேர்ந்த குமரேசன் என்பவர் ஓட்டி வந்த வேன் பாண்டி மீது மோதியதில் கீழே விழுந்ததில் படுகாயங்கள் ஏற்பட்டதில் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ( ஜூன் .9)காலை உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story