திருவேங்கடத்தில் மது மற்றும் போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி தலைமையாசிரியர் பொன்ரசு தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குருவிகுளம் சுகாதாரத் துறை ஆய்வாளர் குருமூர்த்தி, திருவேங்கடம் தலைமை காவலர் மலையாண்டி. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேலுச்சாமி, அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருப்பதி மற்றும் முனிராஜ், ஓவிய ஆசிரியர் மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

