கரூர் -கள்ளக்காதல் விவகாரம். கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்கு.

கரூர் -கள்ளக்காதல் விவகாரம். கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்கு.
கரூர் -கள்ளக்காதல் விவகாரம். கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்கு. கரூர் அண்ணா நகர் ஃபர்ஸ்ட் கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் வயது 32. இவரது மனைவி பிரியதர்ஷினி. பிரியதர்ஷினிக்கு வேறு ஒரு நபருடன் தகாத உறவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பிரியதர்ஷினியை சரத்குமார் பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில் ஜூன் 8-ம் தேதி கணவன் - மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பிரியதர்ஷினி கத்தியால் சரத்குமாரின் வயிறு தோள் பகுதியில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சரத்குமார் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து சரத்குமார் அளித்த புகாரின் பேரில் ,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட கரூர் மாநகர காவல் துறையினர் சுபாஷினி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தகாத உறவுக்காக கணவனையே கத்தியால் குத்திய விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story