சைபர் கிரைம் திருட்டில் புதுவகை

சைபர் கிரைம் திருட்டில் புதுவகை
X
சைபர் கிரைம் திருட்டில் புதுவகை
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இங்கு தங்களது தாய், தந்தை மற்றும் உறவினர்களுக்கு பணம் அனுப்பும்போது தனியார் ஏஜென்ட் மூலம் நீங்கள் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு பணம் அனுப்பினால் அவர்கள் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்ட பணத்தை அனுப்புவதால் உங்கள் உறவினர்களின் வங்கி கணக்குகள் சைபர் கிரைம் போலீசாரால் முடக்கப்படுகிறது. மேலும் சைபர் கிரைம் போலீசாரால் உங்களது உறவினர்கள் தாய், தந்தையினர் கைது செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து நீங்கள் அனுப்பும் பணம் இங்கு அவர்களுக்கு சென்றடைவதும் இல்லை மேலும் அவர்கள் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். எனவே வெளிநாட்டில் வாழும் நபர்கள் தமிழ்நாட்டில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பணம் அனுப்பும்போது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மணி எக்சேஞ்ச் மூலம் அனுப்ப வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story