தொழில் பயிற்சிக்கு விண்ணப்பம் இளைஞர்களுக்கு அழைப்பு

X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக இளைஞர்கள் சுயவேலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக ஊரக வளர்ச்சி துறையினர் உதவியுடன், அரியலுார், துாத்துக்குடி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், உண்டு உறைவிட பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு, மொபைல்போன் பழுது நீக்குதல், ஓட்டுநர் உரிமம், வீட்டு உபயோகப்பொருட்கள் பழுது நீக்குதல், கொத்தனார், பயிற்சி, தட்டச்சு, இருசக்கர வாகனம் பழுது நீக்குதல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி ஆகிய 64 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர், 45 வயதிற்கு மிகையாமல் இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ., பட்டயம், பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சின்ன காஞ்சிபுரம், 32-ஏ-, வரதராஜ பெருமாள் கோவில் சன்னிதி தெரு, 044 - 27268037 தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். மேலும், திட்ட இயக்குநர், ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம், காஞ்சிபுரம் மற்றும் மொபைல் போன் எண்ணில் 94440 94280 தொடர்புக் கொள்ளலாம். மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண்:180 03098 039 எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

