கோவில் மண்டப நிர்மாண திருப்பணி துவக்க யாக பூஜை

X

குமாரபாளையத்தில் கோவில் மண்டப நிர்மாண திருப்பணி துவக்க யாக பூஜை நடந்தது
குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்திரராஜ பெருமாள் கோவில் முன்பு, மண்டப நிர்மாண திருப்பணி துவக்க விழா நடந்தது. இதையொட்டி, விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம் நடத்தப்பட்டது. மண்டப கட்டுமான பணிகள் துவங்கியது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story