கிருஷ்ணகிரி அருகே மண் கடத்திய டிராக்டர், பொக்லைன் பறிமுதல்.

X

கிருஷ்ணகிரி அருகே மண் கடத்திய டிராக்டர், பொக்லைன் பறிமுதல்.
கிருஷ்ணகிரி அருகேயுள்ள அகசிப்பள்ளி பகுதியில் அரசு புறம் போக்கு நிலம் உள்ளது. இந்த நிலையில் வி.ஏ.ஓ. கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு டிராக்டர் ஒன்றும், பொக்லைன் ஒன்றும் இருந்தது. அதில் அனுமதியின்றி மண் அள்ளி கடத்தியது தெரிய வந்தது. இதுபற்றி புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர், பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story