நீதிமன்ற வளாகத்தில் பெண் போலீசுக்கு மிரட்டல்

நீதிமன்ற வளாகத்தில் பெண் போலீசுக்கு மிரட்டல்
X
தக்கலை
குமரி மாவட்டம் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருபவர் சபீனா. இவர் அதே காவல் நிலைய நீதிமன்ற பணிகளை கவனிக்கும் பணியில் உள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் நீதிமன்ற பணி தொடர்பான கோப்புகளுடன் பத்மநாபபுரம் ஜே எம் 2 நீதிமன்றத்தில் லோக் அதாலத் வழக்குகள் தொடர்பான கோப்புகளை கொண்டு சென்றார். அப்போது அங்கு வந்த வக்கீல் ஜஸ்டின் (35) என்பவர் சபீனாவை தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகள் பேசி, கோப்புகளை பிடுங்கி எறிந்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சபீனா தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஜஸ்டின் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story