தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் அலுவலகம் திறப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின்   அலுவலகம் திறப்பு
X
மார்த்தாண்டத்தில்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் குமரி மேற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது . தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார் . மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்க துணை தலைவர் செல்வராஜ் வரவேற்றார். வரவேற்பு நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வணிகர்கள் பெரும் திரளாககலந்து கொண்டனர். திறந்த ஜீப்பில் மாநிலத் தலைவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் . மாநில அமைப்பாளர் டாக்டர் எல் எம் டேவிட்சன், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் அம்சி சரவணன், வழிகாட்டி குழு உறுப்பினர் கருப்பையா ராஜன், வடசென்னை மாவட்ட செயலாளர் தங்கதுரை, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் பேசியதாவது :- தமிழகம் முழுவதும் வணிகர்கள் ஜிஎஸ்டி பிரச்சனையை சந்தித்து வருகின்றனர் ஜிஎஸ்டி பல்வேறு குறைகள் உள்ளது ஜிஎஸ்டி குறைகளை அரசுகள் களைய முன் வராவிட்டால் அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை வணிகர் சங்கம் முன்னெடுக்கும். அதேபோல் பல்வேறு இடங்களில் வணிகர்கள் பல்வேறு பிரச்சனைகளை இன்னல்களையும் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர். வணிகர் ஆன்லைன் வர்த்தகத்தால் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர் நாம் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் வணிகர்கள் நலன் காப்பதற்காக ஒரு வணிகன் பாதிக்கப்பட்டால் நாம் ஒற்றுமையோடு ஒன்று திரண்டு வணிகரின் நலனுக்காக போராடவேண்டும். வணிகர்களின் உரிமைக்காக எந்த நேரமும் அரசிடம் எடுத்துக்கூறி அவர்கள் நலன்களை மீட்டெடுப்பதும் இலட்சியம் ஆகும் இவ்வாறு மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன்பேசினார் ..
Next Story