மார்த்தாண்டம் மேம்பாலத்தில் போக்குவரத்து துவக்கம்

X

கன்னியாகுமரி
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தார் போடுவதற்காக கடந்த மாதம் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தின் கீழ்பகுதி வழியாக விடப்பட்டது. கனரக வாகனங்கள் சிராயன்குழியிலிருந்து உண்ணாமலைக்கடை வழியாகவும் மறுபுறம் குழித்துறையிலிருந்து கழுவன்திட்டையிலிருந்து வழியாகவும் திருப்பிவிடப்பட்டது. இருப்பினும் மார்த்தாண்டத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மார்த்தாண்டம் ஜங்ஷனை கடந்து செல்ல குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் என்ற நிலையில் தொடர்ந்தது. இந்தப் பணி நேற்று மாலையோடு நிறைவடைந்தது. இதனால் மார்த்தாண்டம் எம்பாலத்தில் முழுமையான போக்குவரத்து மாலை முதல் துவங்கியது. இதனால் மார்த்தாண்டம் வணிகர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story