பணம் கையாடல் செய்த பெண் காசாளர் கைது

பணம்  கையாடல் செய்த பெண் காசாளர் கைது
X
பத்மநாபபுரம் நகராட்சியில்
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் வளர்மதி (35)என்பவர் அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்தார். அவரிடம் காசாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2023- 24 ஆம் ஆண்டு வசூல் பணத்தை நகராட்சி வங்கி கணக்கில் செலுத்தவில்லை என கையாடல் செய்ததாக கடந்த ஆண்டு தணிக்கை செய்த போது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த நவம்பர் மாதம் வளர்மதி துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து தற்போது அதிகாரிகள் ஆய்வு செய்வதில் ரூ.12 லட்சத்து 63 ஆயிரத்து 395 வளர்மதி கையாடல் செய்தது உறுதியானது. இதை அடுத்து பத்மநாபபுரம் நகராட்சி கமிஷனர் முனியப்பன் நேற்று தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வளர்மதியை கைது செய்தனர்.
Next Story