பெண் விஷம் குடித்து தற்கொலை

பெண் விஷம் குடித்து தற்கொலை
X
புதுக்கடை
குமரி மாவட்டம் தொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் மனைவி பிரேமா (54) இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் ஆல்பர்ட்ராஜ் என்ற மகனுடன் பிரேமா வசித்து வந்தார். பிரேமா கடன் பிரச்சனையால்  அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம்  வீட்டில் மருமகளுடன் இருக்கும்போது பிரேமா திடீரென யாருக்கும் தெரியாமல் பூச்சி மருந்தை எடுத்து குடித்து உள்ளார். இதை கண்டு உறவினர்கள்  உடனடியாக நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று  இரவில் பிரேமா உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story