பூட்டிய வீட்டில் அழகிய நிலையில் வாலிபர் பிணம்

X

கன்னியாகுமரி
குமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் பாபு (42). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டிலிருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாபு இறந்து, அழுகிய நிலையில் பிணமாக காணப்பட்டார். இது குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாபுவின் உறவினர் ஆலன் என்பவர் புதுக்கடை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story