வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, ஊரக பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து நேரில் ஆய்வு.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், மோளப்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் நகர்ப்புற பகுதிகளில் நீண்ட நாட்களாக பட்டாக்கள் ஏதுமின்றி, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழும் மக்களுக்கு அவர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசின் சில வரைமுறைகளுக்கு உட்பட்டு, பட்டா வழங்கிட அறிவுறுத்தியுள்ளார்கள்.அதனடிப்படையில், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், மோளப்பாளையம் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு வாசிகள் நகர்ப்புற வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த நபர்களின் குடியிருப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் குடியிருப்புவாசிகளிடம், நீண்ட வருடங்களாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, மற்றும் வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்து ஆய்வு மேற்கொண்டார். ஆவணங்கள் சரியாக இருப்பின் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வீட்டுமனை வரன்முறைபடுத்தி, நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் விரைவில் பட்டா வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், மோளப்பாளையம் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கும் வகையில் உள்ள தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் போன்றவை இருப்பின் அவற்றில் மழை நீர் தேங்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் எனவும், குளிர்சாதன பெட்டியின் பின்புறம் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அணைக்கட்டிபாளையத்தில் ஒழுங்குமுறைவிற்பனை கூடம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
Next Story