கல்வி தான் ஒரு குடும்பத்தையும், சமுதாயத்தையும் முன்னேற்றும்

X

கல்வி தான் ஒரு குடும்பத்தையும், சமுதாயத்தையும் முன்னேற்றம் அடையச்செய்யும் பாறைப்பட்டியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம் மகள் இந்துமதி அசோக் திருமண வரவேற்பு விழா திண்டுக்கல் பாறைப்பட்டி சி.கே.சி.எம். மஹாலில் நடைபெற்றது. விழாவில் மணமக்களை வாழ்த்த வந்த திமுக மாநில துணை பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்கள் பேசும் போது கழக நிர்வாகிகளின் இல்ல விழாக்களுக்கு செல்லும் போது மனதில் ஒரு வித மகிழ்ச்சி ஏற்படும். மணமக்கள் இருவரும் பொறியாளராக உள்ளனர். நீங்கள் உங்கள் குழந்தைகளை சிறந்த முறையில் கல்வி கற்றுத் தந்து நன்கு வளர்க்க வேண்டும். காரணம் கல்வி தான் ஒரு குடும்பத்தையும், ஒரு சமுதாயத்தையும் முன்னேற்றமடைய செய்யும். 2026-ம் சட்டமன்ற தேர்தல் வரை ஒவ்வொரு திமுக தொண்டனும் தினசரி சந்திக்கும் பொதுமக்களிடம் கழக அரசின் சாதனை திட்டங்களை எடுத்துரைத்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் கழகத் தலைவர் அறிவித்தபடி 200 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறலாம் என்றார். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி திண்டுக்கல் கிழக்கு மாவட்டதிமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.காந்திராஜன், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
Next Story