கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில், பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீரை முறையாக வழங்காததைக் கண்டித்தும், நகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரியை கடுமையாக உயர்த்த்தியதைக் கண்டித்தும் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஓ.எஸ்.மணியன், கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு புறக்கணிப்பதைக் கண்டித்தும், வேதாரண்யம் நகராட்சியில் பல்வேறு துறைகளிலும் நடைபெற்று வரும் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்பாட்டத்தில், ஒன்றியச் செயலாளர்கள் வழக்கறிஞர்கள் கிரிதரன், சுப்பையன், நகர செயலாளர் நமசிவாயம் மற்றும் ஒன்றிய, நகர. கிளைக்கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

