தமிழகத்தில் மரவள்ளி கிழங்குக்கான விலை வீழ்ச்சி அடைந்ததற்கு சாகுபடி அதிகரிப்பே காரணம்.! -கள் நல்லசாமி தகவல்

தமிழகத்தில் மரவள்ளி கிழங்குக்கான விலை வீழ்ச்சி அடைந்ததற்கு சாகுபடி அதிகரிப்பே காரணம்.! -கள் நல்லசாமி தகவல்
X
தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் கவனிக்க வேண்டியவர்களை கவனித்து விடுவதால் சிறையில் இருந்து சீக்கிரமாகவே வெளியில் வந்து விடுகின்றனர்.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள சனு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில்...தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளை நடக்கிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடம், ஈரோடு மாவட்டம் சிவகிரியை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் நல்லூரில் கொலை நடந்துள்ளது. இந்த குற்றச் சம்பவம் சட்ட விழ்ச்சியை அடைந்ததாகவே காரணம் என கருதுகிறோம், தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் கவனிக்க வேண்டியவர்களை கவனித்து விடுவதால் சிறையில் இருந்து சீக்கிரமாகவே வெளியில் வந்து விடுகின்றனர் என பேசிய அவர் சிறையில் தாராளமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைக்கின்றன மேலும் பள்ளி வளாகத்தின் வெளியில் போதைபொருட்களும் கிடைக்கிறது.
தமிழகத்தில் மரவள்ளி கிழங்குக்கான விலை வீழ்ச்சி அடைந்ததற்கு சாகுபடி அதிகரிப்பே காரணம் எனவும் தமிழக அரசிடம் சரியான திட்டமிடுதல் இல்லை என்பதால் அதிகமாக விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து விட்டனர் என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக விவசாயி முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன்,தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.ஜி.இராஜேந்திரன்,இளம் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சௌந்தர்,நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, சிப்காட் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார்,பாஜக மாநில விவாசய அணி மாநில துணை தலைவர் சத்யபானு,இளம் விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன்,விவசாய முன்னேற்றக் கழகத்தின் மாநில தகவல் தொழில்நுட்ப தலைவர் மாதவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story