நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக மீண்டும் ஆ.மோகன்ராஜூ நியமனம்

X
Rasipuram King 24x7 |10 Jun 2025 8:05 PM ISTநாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக மீண்டும் ஆ.மோகன்ராஜூ நியமனம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாமக செயலாளராக மீண்டும் ராசிபுரம் ஆ.மோகன்ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மாவட்ட செயலாளராக ஒ.பி.பொன்னுசாமி செயல்பட்டு வந்த நிலையில், கட்சியில் உட்கட்சி பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தற்போது ஆ.மோகன்ராஜூ -வை மாவட்ட செயலாளராக கட்சியின் நிறுவனர் டாக்டர் ச.ராமதாசு அறிவித்துள்ளார். இதே போல் மாவட்டத் தலைவராக பொன்.முருகேசன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவராக ஜி.திருப்பதி ஆகியோரையும் நியமித்துள்ளார்.
Next Story
