அதிக போதையில் கூலித்தொழிலாளி இறப்பு

X
Komarapalayam King 24x7 |10 Jun 2025 8:47 PM ISTகுமாரபாளையத்தில் அதிக போதையில் கூலித்தொழிலாளி இறந்தார்.
குமாரபாளையத்தில் விசைத்தறி பாவுக்கு ஓடி எடுக்கும் வேலை செய்து வருபவர் ரவி, 60. இவர் குடிப்பழக்கம் உள்ளவர். நேற்று மாலை 03:15 மணியளவில், சின்னப்பநாயக்கன்பாளையம் டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்துள்ளார். இவரை அக்கம் பக்கத்தினர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இது குறித்து தகவலறிந்த ரவியின் சகோதரி பாப்பாத்தி, 57, நேரில் வந்து பார்த்த போது, ரவி, இறந்த நிலையில் இருந்தார். குமாரபாளையம் போலீசில் பாப்பாத்தி ரவியின் இறப்பு குறித்து விசாரணை செய்திட புகார் கொடுத்தார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த ரவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
Next Story
