ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*
X
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி தின கூலி ரூபாய் 700 வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட பணிக்கு ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும், கலைஞர் கருணாநிதி அமைத்த விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், வசிப்பிடம் இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், 60 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை ரூபாய் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
Next Story