அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தைகாணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் நேரலையில் பார்வையிட்டு, குத்து விளக்கேற்றினார்.
பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் நேரலையில் பார்வையிட்டு, குத்து விளக்கேற்றினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் அருகில் இன்று (10.06.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் 1.85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்கா, பொது நூலக இயக்ககம் சார்பில் 29.80 கோடி ரூபாய் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 இடங்களில் கூடுதல் நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்கள். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தையும் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வினை தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை பார்வையிட்டு, குத்து விளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு வருகை புரிபவர்கள் பயன்பெறுவதற்காக இந்நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர மன்ற தலைவர் திருமதி.அம்பிகா ராஜேந்திரன், அட்மா தலைவர் திரு.வீ.ஜெகதீசன், இந்திய தொழில் சங்க தலைவர் திரு.ஈஸ்வரன், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. கலா, மரு.சரவணன், மரு.விஜயன், ரத்த பரிசோதனை அலுவலர் திரு.வசந்த், நூலகத் துறை அலுவலக பணியாளர்கள் மற்றும் நூலகர்கள், மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story