புதை சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அருகே எச்சரிக்கை பலகை

புதை சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அருகே எச்சரிக்கை பலகை
X
புதை சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அருகே எச்சரிக்கை பலகை
செங்கல்பட்டில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை அடுத்து சாலைகளில் ஜேசிபி மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. புதை சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்படும் பள்ளங்களில் எதுவுமே கற்கள் பதிக்கப்படாமல் மீண்டும் மூடப்படுகின்றன. பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களை அப்படியே விட்டுச் சென்று விடுகின்றனா். மேலும், பள்ளங்கள் மூடப்படாமலும் எச்சரிக்கை பலகையோ தடுப்புகளோ வைக்காமல் எந்தவித அறிகுறியும் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து வாகனங்களும் சேதமடைந்து வாகன ஓட்டிகளும் காயம் அடையும் அவல நிலை உருவாகிறது. புதை சாக்கடை திட்ட பள்ளங்கள் உள்ள இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்நோக்கியுள்ள நிலையில் தற்போது அப்பகுதிகளில் எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
Next Story