கோடை மழையின் காரணமாக மாம்பழம் மகசூல் குறைந்துள்ளது

கொளுத்தும் வெயில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த மழையால் மாமரங்களில் பூக்கள் மாம்பிஞ்சுகள் பழுக்கும் நிலையில் உள்ள காய்கள் உதிர்ந்து வெம்பி வருவது மாம்பழ விவசாயிகளை மனவேதனை அடையசெய்துள்ளது.
திருவள்ளூர்: கொளுத்தும் வெயில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த மழையால் மாமரங்களில் பூக்கள் மாம்பிஞ்சுகள் பழுக்கும் நிலையில் உள்ள காய்கள் உதிர்ந்து வெம்பி வருவது மாம்பழ விவசாயிகளை மனவேதனை அடையசெய்துள்ளது. தமிழகத்தில் மாம்பழம் சாகுபடி செய்யப்படும் முக்கிய மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தில் ஆரம்பாக்கம் ஏடூர் ஆரூர், தோக்கமூர் கும்மிடிப்பூண்டி, சாணா புத்தூர் கடம்பத்தூர்,ஊத்து கோட்டை திருவாலங்காடு, பூண்டி, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை, திருத்தணி பொன்படி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பங்கனப்பள்ளி, அல்போன்சா, பெங்களூரா, ருமானி, , செந்தூரம், நீலம் மற்றும் ஜவ்வாரி உள்ளிட்ட மாம்பழ வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூக்கத் தொடங்கி, ஏப்ரல், மே மாதங்களில் மகசூலுக்குத் தயாராகிவிடுவது வழக்கம். தற்போது மாம்பழ சீசன் நடைபெற்று வந்தாலும் பங்கனப்பள்ளி, ஜவ்வாரி, செந்தூரம் உள்ளிட்ட சில ரகங்கள் மட்டுமே, குறைந்த அளவிலேயே விற்பனைக்கு வந்துள்ளன. இதனால், பொன்னேரி, செங்குன்றம்,ஊத்துக்கோட்டை திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில், சில்லறை விலையில் கிலோ ₹.50 முதல் ₹.80 வரை மாம்பழங்கள் விற்பனையாகின்றன. அதிக வெயில் மற்றும் அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக மாம்பழம் மகசூல் குறைந்துள்ளது இதனால் மாம்பழம் தோட்டம் வைத்துள்ள , விவசாயிகள் மட்டுமன்றி லீசுக்கு எடுத்து பயிர் செய்து வருபவர்களும் வேதனை அடைந்து வருகின்றனர். மாம்பழ சாகுபடிக்கு தண்ணீர் மற்றும் மிதமான வெயில் உகந்தது. ஆனால், ஆரம்பாக்கம் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிக ஆழத்துக்குச் சென்றுவிட்டது. மேலும், வெயிலும் மழை மாறி மாறி விளைந்துள்ள மாங்காய்கள் மற்றும் பூக்கள் மீது பட்டு அதன் நிறத்தையும் தன்மையையும் மாற்றி உள்ளது இதனால் வியாபாரிகள் மக்களிடையே விற்பனை செய்ய முடியாமல் சுவை மிகுந்த ஆரம்பாக்கம் ஏடூர் கும்பிளி தோக்கமூர் மாம்பழங்களை கிலோ 30 ரூபாய்க்கு கூட விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வேதனை அடைந்து வருகின்றனர் பூக்கள் பூக்கத் தொடங்கியபோதே பெருமளவில் கருகி உதிர்ந்து விட்டன. மீதமிருந்த பூக்களில் காய்கள் பிடிக்கத் தொடங்கினாலும், அவற்றிலும் கணிசமானவை அதிக வெயில் மற்றும் பலத்த காற்றுடன் பெய்யும் மழையின் காரணமாக வெம்பி கீழே விழுந்து விட்டன. இதனால், மகசூல் குறைவாகவே உள்ளது இம்மாவட்டத்தில், ஆரம்பாக்கம் பகுதியில்தான் அதிக அளவில் மாம்பழ சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு வெயில் மற்றும் சூறைக்காற்று மழையால் , பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு மாம்பழங்கள் தயாராகாமல் மரத்திலேயே வெம்பி வருகிறது. இந்த ஆண்டு மகசூல் குறைவுதான். ஒரு ஏக்கருக்கு, பராமரிப்பு செலவுக்காக 75 ஆயிரம் வரை செலவு செய்யும் தங்களுக்கு, 3 அல்லது 4 டன் மகசூல் கிடைத்தால்தான் லாபம் கிடைக்கும். ஆனால், தற்போதுள்ள நிலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு டன் மகசூல் கூட கிடைக்கவில்லை என்றும். இது பராமரிப்புச் செலவைக்கூட ஈடுகட்டாது. இதனால் மாம்பழ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் மிகுந்த கவலையில் உள்ளதாக ஏடூர் கிராமத்தை சேர்த்த மாம்பழ விவசாயி முத்து ஏக்கத்துடன் தெரிவித்தார்.
Next Story