வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூஜை.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூஜை.
X
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி விசாகத்தையொட்டி, ஆரணிப்பாளையம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்னா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை பூச்சொரிதல் மற்றும் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பூச்சொரிதல் நிகழ்ச்சியையொட்டி, முன்னதாக சுவாமி அபிஷேகத்துக்காக கோயிலுக்கு பக்தா்கள் மலா்களை காணிக்கையாக அளித்திருந்தனா். பின்னா், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு நவ கலச அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.பி.ராதாகிருஷ்ணன், நகா்மன்ற 7-ஆவது வாா்டு உறுப்பினா் வி.பி.ராமகிருஷ்ணன் ஆகியோா் உபயமாக அளித்திருந்த வெள்ளிக் கவசம் சுவாமிக்கு அணிவித்து மலா்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மலா்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், விழாக் குழுவினா் செய்திருந்தனா். சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை சாலையில் பழைமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்னா வெங்கடேசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து மலா்களால் அலங்காரித்து கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. வீடு தோறும் சுவாமிக்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனைகாண்பித்து வழிபட்டனா். கோயில் தா்மகா்த்தா தணிகைமலை மற்றும் நிா்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
Next Story