கடையநல்லூரில் நாட்டு வெடியை கடித்த பசு வாய் கிழிந்து பரிதாப பலி

கடையநல்லூரில் நாட்டு வெடியை கடித்த பசு வாய் கிழிந்து பரிதாப பலி
X
நாட்டு வெடியை கடித்த பசு வாய் கிழிந்து பரிதாப பலி
தென்காசி மாவட்டம் மேலகடையநல்லுார் முருகன் என்பவரின் பசுமாடு, கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலை அருகில் தென்னந்தோப்பில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, தரையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை மாடு கடித்துள்ளது. இதில், குண்டு வெடித்து சிதறியதில், சம்பவ இடத்திலேயே மாடு பரிதாபமாக வாய் கிழிந்து உயிரிழந்தது. கடையநல்லுார் போலீசார், நாட்டு வெடிகுண்டுகளை தோட்டத்தில் வைத்த, மேல கடையநல்லுார் பால்பாண்டி, 46, என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலில், அவரின் சகோதரர் சந்தன பாண்டி, 40, பண்பொழி, கரிசல்குடி குடியிருப்பை சேர்ந்த சுபாஷ், 20, செங்கோட்டை மேலுார் ராம்ஜி, 35, ஆகியோரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கடையநல்லுார் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Next Story