சத்துணவு ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கருப்பு உடை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கருப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார், அங்கம்மாள் சித்தன் மாது அவர்கள் முன்னிலை வகித்தனர், பழனிச்சாமி மாவட்ட தலைவர் துவக்க உரையாற்றினார், காவேரி மாவட்ட செயலாளர் அவர்கள் கோரிக்கை விளக்க உரையாற்றினார், இதனை தொடர்ந்து தெய்வானை சண்முகம் புகழேந்தி ஜெயவேல் சேகர் முருகன் தேவகி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர், நிகழ்ச்சிக்கு முன்னதாக மாநில தலைமை முடிவின்படி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் கருப்பு உடை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் திரளாக பங்கு பெற்று அவர்களுக்கு 7850 அகவிலைப்படி உள்ளிட்ட வாழ்வாதாரத்தை கோரிக்கைகளை முன்னெடுத்து தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Next Story