ஊத்தங்கரை: கல்லாவி அருகே காவல் ஆய்வாளா் காயம்.

ஊத்தங்கரை: கல்லாவி அருகே காவல் ஆய்வாளா் காயம்.
X
ஊத்தங்கரை: கல்லாவி அருகே காவல் ஆய்வாளா் காயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி அடுத்த ரெட்டிபட்டியில் நேற்று திருவிழா நடைபெற்றது.அப்போது பட்டாசு வெடித்த போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பேருந்து மீது கல் விழுந்து கண்ணாடி உடைந்ததில் இரண்டு குழந்தைகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கல்லாவி காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன், பட்டாசு வீசிய அதே கிராமத்தைச் சோ்ந்த தென்னரசை (32) கைது செய்து அழைத்துச் சென்றார். அப்போது அதே கிராமத்தைச் சோ்ந்த தென்னரசின் உறவினா் அருண் (27), காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன் மீது கல் வீசி தாக்கியுள்ளார். இதில், ஆய்வாளா் தலையில் படுகாயமடைந்தார். இதைத் தொடா்ந்து, தென்னரசு, அருண் இருவரையும் போலீசார் கைதுசெய்தனா். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
Next Story