ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாசால் நியமிக்கப்பட்ட மாவட்ட  செயலாளார் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம்

ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாசால் நியமிக்கப்பட்ட மாவட்ட  செயலாளார் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம்
X
ஜெயங்கொண்டத்தில்  அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து ஒன்றிய நகரப் பகுதிகளில் அதிக கிளை அமைத்து கட்சியை வலுப்படுத்துவது என பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர், ஜூன்.11- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாசால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் தலைமையில் நேற்று தனியார் மண்டபத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில அமைப்பு தலைவர் டி எம் டி திருமாவளவன் முன்னிலை வகித்தார்.முன்னதாக நகர செயலாளர் மாதவன்தேவா வரவேற்று பேசினார். திமுக தான் எதிர்க்கட்சி அதற்கு எதிராக 2026 ஆம் ஆண்டு பாமக வெல்லும். மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் அதிகப்படியான உறுப்பினர்கள் எண்ணிக்கையை சேர்க்க வேண்டும்  ஒன்றிய நகரப் பகுதிகளில் அதிகப்படியான கிளைகளை அமைத்து கட்சியை வலுப்படுத்துவது எனவும் தேர்தலுக்காக அனைவரும் தற்போது இருந்து பாடுபட வேண்டும் எனவும் பேசினார.இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்ட பாமகவின கலந்து கொண்டனர். முடிவில் நகரத் தலைவர் அழகு நன்றி கூறினார். அன்புமணி ராமதாஸ் தரப்பில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ்  ஆகிய இருவரின் படமும் பேனரில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story