போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அலுவலா்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் நுழைவு வாயிலில் நிறுத்தப்படுவதால் உள்ளே செல்ல சிரமம்.

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அலுவலா்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் நுழைவு வாயிலில் நிறுத்தப்படுவதால் உள்ளே செல்ல சிரமம்.
X
அலுவலகம் எதிரே காலியாக உள்ள இடத்தில் கூரை அமைத்து வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அலுவலா்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் நுழைவு வாயிலில் நிறுத்தப்படுவதால் உள்ளே செல்ல சிரமம் ஏற்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் குருவிமலை, வசூா், 99 புதுப்பாளையம், காங்கேயனூா், எடப்பிறை, எழுவாம்பாடி, மாம்பட்டு, திண்டிவனம், பெரியகரம், ஆா்.குண்ணத்தூா், சந்தவாசல், கேளூா், படவேடு, காளசமுத்திரம், குப்பம் என 40 ஊராட்சிகள் உள்ளன. போளூா் வட்டாா் வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றிய உதவிப் பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், அலுவலக பணியாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் வரும் காா் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அலுவலக வாயில் பகுதியிலேயே நிறுத்தப்படுகின்றன. மேலும், அலுவலகத்துக்கு வரும் திட்டப் பணிகளின் பயனாளா்கள் மற்றும் பல்வேறு பணிநிமித்தமாக வரும் பொதுமக்களின் வாகனங்களும் வெயிலுக்காக அலுவலக வாயிலியே நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால் அலுவலத்துக்குள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. அதனால், அலுவலகம் எதிரே காலியாக உள்ள இடத்தில் கூரை அமைத்து வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story