தொப்பையாறு அணையில் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு

நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட தொப்பையர் அணையில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சார்பில் ஒத்திகை விழிப்புணர்வு
தர்மபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி இருப்பதால் தீயணைப்பு துறை சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு வெளிப்புற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக நேற்று தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் அடுத்து உள்ள தொப்பையாறு அணையில் தீயணைப்புத் துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் மழைக்காலங்களில் உயிரையும் உடைமைகளையும் தற்காத்துக் கொள்ளும் முறைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் அணையில் மூழ்கியவர்கள் எவ்வாறு மீட்பது, முதலுதவி செய்வது அவர்களை காப்பாற்றுவது குறித்தும், விழிப்புணர்வு செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர் அவர்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
Next Story