காவேரிப்பாக்கத்தில் போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி!

காவேரிப்பாக்கத்தில் போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி!
X
போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி!
தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளி சார்பில் போலீசாருக்கு மழை மற்றும் பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படு வதுகுறித்த 3 நாள் பயிற்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் மாவட்டத்தில் 45 போலீசாருக்கு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில், தலைமை காவலர்கள் வேலு, கதிரவன், போலீஸ்காரர் ஜான் பீட்டர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து மனிதர்கள், ஆடுகள், மாடுகளை மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தண்ணீரில் இருந்து மீட்கப் பட்ட நபருக்கு அளிக்கும் முதலுதவி பயிற்சி, படகு இயக்கும் பயிற்சி, மரம் அறுக்கும் பயிற்சி, அவசர கால கோபுர விளக்கு இயக்கும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
Next Story