ஆற்காட்டில் பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம்!

ஆற்காட்டில் பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம்!
X
பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம்!
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் முத்துக்கடை அருகே தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். செயலாளர் நல்லூர் சண்முகம் வரவேற்றார். பசுமை தாயக மாநில துணை செயலாளர் பொன்மலை பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் மே மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிக ரமாக நடத்த உழைத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கல்குவாரிகளை உடனே மூட வேண்டும், ஆற்காடு பஸ் நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாக கடைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story