அரக்கோணம்: ரயில்வே ஊழியர்களின் வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

அரக்கோணம்: ரயில்வே ஊழியர்களின் வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
X
ரயில்வே ஊழியர்களின் வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
அரக்கோணம் ஆப்பில்ஸ் பேட்டையில் ரயில்வே குடியிருப்பு உள்ளது. இங்கு ரயில்வே ஊழியர்கள் ராஜேஷ் மீனா, ஆனந்த் மாதவ் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் வழக்கம் போல் தங்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. இதைபார்த்த ரயில்வே ஊழியர்கள் ஸ்கூட்டர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் இங்கு நடந்துள்ளது. போதையில் மர்ம நபர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா?. அல்லது முன் விரோதம் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story