கமிட்டி பாதுகாப்பு கூடத்திற்கு அடிக்கல்

X

அடிக்கல்
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், ரூ. 2 கோடியில் பாதுகாப்புக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் சந்துரு, மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் சக்கரை முன்னிலை வகித்தனர். பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பேசினார். நகராட்சி சேர்மன் முருகன், பேரூராட்சி தலைவர் அன்பு ஒன்றிய குழு சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், லூயிஸ், பிரபு, சிறுபான்மை பிரிவு அக்பர், ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேளாண் துணை இயக்குனர் சுமதி நன்றி கூறினார்.
Next Story