மகா பெரியவர் ஜெயந்தி விழா

X

விழா
திருக்கோவிலுாரில் மகா பெரியவர் ஜெயந்தி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருக்கோவிலுார், பிராமணர் சங்கம் சார்பில், மகா பெரியவர் ஜெயந்தி விழா, கீழையூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்து மகா பெரியவரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவபடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மண்டபத்தில் வைத்து கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், ஜெயதீ ஹோமம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில செயலாளர் முரளி முன்னிலை வகித்தார். கிளை தலைவர் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமை தாங்கினார். உபதலைவர் சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பொருளாளர் ஸ்ரீநாத் நன்றி கூறினார்.
Next Story