புன்னார்குளம் மாகாளி அம்மன் கோயில் பெளர்ணமி பூஜை

புன்னார்குளம் மாகாளி அம்மன் கோயில்  பெளர்ணமி பூஜை
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி, புன்னார்குளம் அருள்மிகு ஸ்ரீஉஜ்ஜைனி மாகாளி அம்மன் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு களபம், பால், பழம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ரோஜா, பிச்சி, செவ்வந்தி, மல்லிகை உள்ளிட்ட மலர்களால் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அனைவருக்கும் கோயில் பூஜாரி குமார் பிரசாதம் வழங்கினார்.
Next Story