வேலை வாங்கித் தருவதாக மோசடி ஒருவர் கைது

X

கருங்கல்
குமரி மாவட்டம் தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் மெர்லின். பட்டதாரியான இவரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி அதே பகுதி ரவி (50), இம்மானுவேல் ராஜகுமார், சென்னையை சேர்ந்த ஹரிஹரகுமார் ஆகிய மூன்று பேர் சேர்ந்து 17 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதையடுத்து பணத்தை திருப்பி கேட்ட மெர்லினை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மெர்லின் கருங்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் மோசடியில் தொடர்புடைய சென்னை அரும்பாக்கம் பகுதி சேர்ந்த ஹரிஹர குமார் என்பவர் சிறையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கருங்கல் போலீசார் அவரை இரண்டு நாள் கஸ்டடியில் எடுத்து கருங்கலில் வைத்து விசாரணை நடத்தினர்.
Next Story