சிவகிரியில் பூக்குழி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது

சிவகிரியில் பூக்குழி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
X
பூக்குழி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சிவகிரியில் அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில் வைகாசி மாத பூக்குழி திருவிழா நடைபெற்றது ஏராளமானோர் பூ இறங்கினார்கள் சிவகிரியில் திரவுபதி அம்மன் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பூக்குழி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டிற்கான திருவிழா ஜூன் 2 கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி ஏற்று விழாவை தொடர்ந்து ஒன்றாம் திருவிழா கீழத்தெரு தேவர் சமுதாயம் சிவகிரி வியாபாரிகள் சங்கம் சிவராமலிங்கபுரம் தேவர் சமுதாயம் இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் ஸ்ரீ மகு டாபிஷேக சண்முக விநாயகர் கோவில் தெரு தேவர் சமுதாயம் வனச்சரகர் அலுவலகம் சார்பிலும் சிவகிரி சேனைத்தலைவர் சமுதாயத்தின் சார்பிலும் நடைபெற்றது எட்டு மட்டும் ஒன்பதாம்ம் திருவிழாக்கள் கோயில் சார்பாகவும் நடைபெற்றது ஒவ்வொரு நாளும் கிருஷ்ணன், அர்ஜூனன், திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சப்ரத்தில் வீதிஉலா ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து பூக்குழித்தி னமான நேற்று காலை அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேக அலங்கார பூசை நடைபெற்றது யாகசாலை வளர்க்கப்பட்டு யாக பூசைகள் நடைபெற்றது கோயில் முன்பு உள்ள பூக்குழி திடலில் வேத பாராயணம் முறைப்படி அக்கினி வளர்க்கப்பட்டது மாலை 5 மணி அளவில் துரோபதி அர்ச்சுனர் பாஞ்சாலி ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர் நான்கு ரத வீதி வழியாக சென்று பூக்குழி திடலை அடைந்தனர் விரதம் இருந்து பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனும் முழக்கத்துடன் பின்னால் வந்தனர் சப்பரம் கோயில் முன்பு நின்றவுடன் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் கோயில் பூசாரியை மாரிமுத்து பூ இறங்கி தூவக்கி வைத்தார் தொடர்ந்து கையில் குழந்தைகளுடனும் விளக்குகளுடனும் தீ சட்டியுடனும் விரதமிருந்த திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள் தொடர்ந்து 800 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பூ இறங்கினார்கள் இன்று 11ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை நிர்வாக அலுவலர்கள் தக்கர் வெற்றிவேந்தன் செயல் அலுவலர் கணேஷ் குமார் சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் சங்கர் கணேஷ் செயலாளர் ஆறுமுகம் பொருளாளர் முத்துராமன் துணைத் தலைவர் சக்திவேல் துணைச் செயலாளர் திருப்பதிதண்டல் காளிமுத்து ஆலய பூசாரி மாரிமுத்து மற்றும் அனைத்துகாப்புகட்டி பக்தர்கள் மற்றும் விழாக் குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story