குற்றால அருவி நீரில் பாம்பு சுற்றுலா பயணி கையில் சுற்றியது

X

நீரில் பாம்பு சுற்றுலா பயணி கையில் சுற்றியது
தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவு சுற்றுலா பயணியர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அருவி தண்ணீரில் அடித்து வரப்பட்ட நீர்ச்சாரைப் பாம்பு ஒன்று, குளித்துக் கொண்டிருந்த ஒருவரின் கையை சுற்றியது. இதில் அந்த சுற்றுலா பயணி அதிர்ச்சியடைந்தார். சக சுற்றுலா பயணியர் ஓட்டம் பிடித்தனர். அந்த நேரம் மின்தடை ஏற்பட்டிருந்ததால், மொபைல் போன் வெளிச்சத்தில் நீண்ட நேரம் போராடி, இறுக சுற்றி இருந்த பாம்பை எடுத்து, அந்த பயணி அருவி ஓடையில் வீசினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story