பெரிய அய்யம்பாளையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு,

பெரிய அய்யம்பாளையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு,
X
ஆரணி அடுத்த பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் சார்பாக பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆரணி அடுத்த பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் சார்பாக பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் மறுசுழற்சி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இதற்கு கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் கிராம மக்களுக்கு ஆதரவாக பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் காலை முதலே வகுப்பை புறக்கணித்து கையில் பதாகைகள் மற்றும் கருப்பு கொடிகளை ஏந்தியபடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் குடிநீர் மாசடைந்து தங்களுக்கு குடிநீர் வாழ்வாதாரம் இழக்கும் சூழ்நிலை உருவாகும் நிலத்தடி நீர் மாசடைந்து விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் பெரிதளவும் பாதிக்கப்படுவர். எனவே தமிழக அரசு உடனடியாக இத்திட்டத்தை தங்கள் பகுதியில் அமைப்பதை கைவிட வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். என் நிலையில் ஆரணி வட்டாட்சியர் கௌரி சம்பா இடத்திற்கு நேரில் சென்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால் எவ்வித பாதிப்பும் வராது ஏற்கனவே சுத்திகரிப்பு நிலையம் உள்ள இடங்களில் செயல்படும் விதத்தை வீடியோவில் பாருங்கள் உங்களுக்கு தெரியும் என்று கூறினார் ஆனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் இதனால் ஆரணி டிஎஸ்பி பொறுப்பு தலைமையில் கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன ர்.
Next Story